2 இராஜாக்கள் 11:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்து போனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார் யாவரையும் சங்காரம்பண்ணினாள்.

2. யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளியறையில் ஒளித்துவைத்தார்கள்.

3. இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.

2 இராஜாக்கள் 11