1 நாளாகமம் 9:23-30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

23. அப்படியே அவர்களும், அவர்கள் குமாரரும் கர்த்தருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்து வாசல்களைக் காக்கிறவர்களை முறைமுறையாய் விசாரித்து வந்தார்கள்.

24. வாசல்களைக் காக்கிறவர்கள் நாலு திசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.

25. அவர்கள் சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து, ஏழுநாளுக்கு ஒருவிசை மாறிமாறி அவர்களோடிருக்க வருவார்கள்.

26. தேவாலயத்தின் பண்டகசாலைகள்மேலும் பொக்கிஷசாலைகள்மேலுமுள்ள விசாரணை உத்தியோகம் லேவியரான அந்த நாலு பிரதான காவலாளர்வசத்தில் ஒப்புவிக்கப்பட்டது.

27. காவல் அவர்களுக்கு ஒப்புவித்திருந்தபடியால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இராத்தங்கியிருந்து, காலமே கதவுகளைத் திறந்துவிடுவார்கள்.

28. அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பணிமுட்டுகள் ஒப்புவித்திருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள்.

29. அவர்களில் சிலர் மற்றப் பணிமுட்டுகளின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மா, திராட்சரசம், எண்ணெய், சாம்பிராணி, சுகந்தவர்க்கங்களின்மேலும் விசாரணைக்காரராயிருந்தார்கள்.

30. ஆசாரியரின் குமாரரில் சிலர் சுகந்தவர்க்கத்தால் பரிமளதைலம் இறக்குவார்கள்.

1 நாளாகமம் 9